புறநகர் ரயில் முழுவதையும் குளிர்சாதன வசதி கொண்டதாக மாற்றுவது குறித்து ஆய்வு பரிந்துரை அளிப்பது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் ஒப்பந்த புள்ளி கோரியிருக்கிறது. இந்த ஒப்பந்தம் கடந்த அக்டோபர் மாதம் முதல் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் பலரும் இந்த ஒப்பந்தத்தை எடுக்கவே தயாராக இருக்கின்றனர். இருப்பினும் இந்த ஒப்பந்தத்திற்கான கால அவகாசத்தை மெட்ரோ ரயில் நிறுவனம் நீடித்துக் கொண்டே வருகிறது. தற்போது பிறப்பிக்கப்பட்ட ஒப்பந்தம் மூலமாக வருகிற மார்ச் மாதத்திற்குள் ஒப்பந்ததாரரை கண்டறிந்து சாத்திய கூறுகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் புறநகர் ரயில் சேவையை  குளிர்சாதனை கொண்டதாக மாற்றுவது பற்றி தெற்கு ரயில்வே மற்றும் மாநில அரசும் அதற்கான பணிகளை தொடங்கும் என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தனது வழித்தடத்தை கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க இருப்பதாகவும் சென்னை மெட்ரோ ரயில் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை 15.5 km தொலைவிற்கு ரூ.4,080 கோடி செலவில் கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கான பரிந்துரையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு சமீபத்தில் சென்னை ஒருங்கிணைந்த மாநகரப் போக்குவரத்து கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் இதற்கான திட்ட பணிகள் செயல்பாட்டிற்கு வந்து மக்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு இன்னும் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஆகும் என கூறப்படுகிறது.

மேலும் இது அமலுக்கு வரும் வரை தற்போதைய பாதையில் இயங்கும் மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகள் அதிகம் குளிர்சாதன வசதி கொண்டதாக இருக்கும் என்பதும் சில பயணிகளின் கருத்தாக இருந்து வருகிறது. இந்தப் பகுதியில் ஏராளமான கல்வி நிலையங்கள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்கி வருவதனால் சென்னை – கடற்கரை – செங்கல்பட்டு இடையே தினமும் 4.5 லட்சம் பேர் பயணித்து வருகின்றனர். இங்கு ஏசி வசதி கொண்ட ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் கூட நிச்சயம் அதற்கான தேவையும் அதிகமாகவே இருக்கும் என தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் கருதுகின்றனர்.