கடக ராசி அன்பர்கள்
இன்று உணவு விஷயத்தில் கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். எந்த காரியத்தையும் நிதானமாக செய்து முடிக்க முடியும். யோசித்து எடுக்கும் முடிவில் வெற்றி இருக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய பணம் கண்டிப்பாக வரும். அடுத்தவர்களின் விசயத்தில் தலையிட வேண்டாம். இன்று நிதானமான செயல்பாடுகள் வெற்றியைக் கொடுக்கும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படக்கூடும். இன்று கோபம் கொஞ்சம் அதிகரிக்கும் பார்த்துக் கொள்ளுங்கள்.
இன்று கோவத்தை குறைப்பது நல்லது. யாரிடமும் கோபப்பட வேண்டாம். நல்லது கெட்டதுகளை யோசித்துப் பார்த்து முடிவு எடுக்கப் பாருங்கள். ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்துப் பார்த்து செயல்படுவது காரிய வெற்றிக்கு கைகொடுக்கும். அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் பாதி பிரச்சனை தீர்ந்து விடக்கூடும். உங்கள் நல்ல மனதிற்கு நல்லதே நடக்கும். அரசின் உதவிகள் புதிய வேலைவாய்ப்புகள் கல்வியில் தேர்ச்சி என அனுகூலமான பலன் கிடைக்கும்.
வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்படும் இனிய திருப்பங்களும் அமையக்கூடும். இன்று நீங்கள் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலனை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். மருத்துவம் சார்ந்த செலவுகள் கொஞ்சம் ஏற்படும். ஆயுதங்களை பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள். வாகனங்களில் செல்லும்போதும் நிதானமாக இருங்கள்.
இன்று அடுத்தவர்களுக்கு உதவ சென்று வீண் பழி ஏற்படலாம் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களை சார்ந்தவர்களே உங்களுக்கு சின்ன சின்ன விஷயங்களை தவறாக செய்யக்கூடும். அதற்கு முன்பு நீங்களே சரியான பாதையை வழி வகுத்துக் கொள்ள வேண்டும். இன்று பெண்கள் அவசரப்பட வேண்டாம் . சூழ்நிலையை கருத்தில் கொண்டு செயல்படுங்கள் . வீட்டு வேலைகளை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். ஓரளவு ஓய்வாக இருக்க முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
இன்று மாணவர்கள் எதார்த்தமாக பழக வேண்டும். பெரியவர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். பெற்றோர்கள் சொல்படி கேட்டு நடக்க வேண்டும். கல்வியில் முழு அக்கறை கொண்டு படித்தால் வெற்றி கிடைக்கும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அதே போன்று இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து விட்டு எந்த ஒரு பணிகளும் ஈடுபடுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 9
அதிஷ்ட நிறம் : பச்சை மற்றும் மஞ்சள் நிறம்