கடந்த ஒரு வருடத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,000 உயர்ந்திருப்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.5,510ஆகவும், சவரன் தங்கம் ரூ.44,080ஆகவும் விற்பனையானது. இந்த விலை படிப்படியாக அதிகரித்து கடந்த ஓராண்டில் கிராமுக்கு ரூ.740 உயர்ந்து இன்று ரூ.6.250 ஆகவும், சவரன் தங்கம் ரூ.5,920 அதிகரித்து ரூ.50,000 ஆகவும் உள்ளது