பொதுவாகவே ஒரு மனிதன் விரைவில் தூங்கவில்லை என்றால் மறுநாள் வேலை பார்க்க முடியாத அளவுக்கு சோம்பேறியாக மாறிவிடுவான். ஒழுங்காக தூங்கினால் மட்டுமே அவனுடைய உடல் புத்துணர்ச்சியாக இருக்கும். இல்லையென்றால் உடலில் நீர்ச்சத்து குறைந்து உடல் சோம்பேறியாக மாறுவது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திலும் பெரிய விளைவுகள் ஏற்படுத்தும். தூக்கம் இவ்வளவு முக்கியமானதாக இருக்கும் போது சாதாரணமாக மனிதனால் எவ்வளவு காலம் தூங்காமல் இருக்க முடியும் என்று தெரியுமா. ராபர்ட் மெக்டொனால்ட் என்ற நபர் 1986 ஆம் ஆண்டு 19 நாட்கள் தொடர்ந்து தூங்காமல் இருந்து உலக சாதனை படைத்தார். இந்த விஷயம் கின்னஸ் புத்தகத்தில் பதிவிடப்பட்ட போதும் பிறகு அதனை மறுத்து விட்டது.

அவருடைய சாதனைக்கு பிறகு இப்படி நீண்ட நேரம் தூங்காமல் இருப்பதால் ஏற்படும் உடல்நல குறைவுகளை காரணம் காட்டி இது போன்ற சாதனைகளை அங்கீகரிக்க கின்னஸ் முன் வரவில்லை. அந்த நபருக்கு முன்பே 17 வயதான  ரேண்டி கார்ட்னர் மற்றும் ப்ரூஸ் மெக்கலிஸ்டர் என்ற இரண்டு மாணவர்கள் 11 நாட்கள் தூங்காமல் இருந்துள்ளனர். மனிதர்களால் எவ்வளவு நேரம் தூங்காமல் இருக்க முடியும் என்பதை கண்டுபிடிக்கும் அறிவியல் ஆய்வுக்காக இந்த இரண்டு மாணவர்களும் இந்த சோதனையில் முயற்சி செய்துள்ளனர். எனவே ஒரு மனிதன் 11 நாட்கள் மட்டுமே தூங்காமல் உயிர் வாழ முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும். அவ்வாறு தூங்கினால் மட்டுமே உடல்நிலை நன்றாக இருக்கும். ஒருவன் தூங்கவே இல்லை என்றால் அவன் உயிர் வாழ்வது சவாலான விஷயமாக மாறிவிடும் எனவும் எச்சரித்துள்ளனர்.