பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் சுகுமார் இயக்கத்தில் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி 5 நாட்களில் 922 கோடி வரை வசூலித்துள்ளது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ள நிலையில் தொடர்ந்து வசூல் வேட்டை‌ நடத்தி வருகிறது. இந்நிலையில் பிரபல நடிகர் சித்தார்த் தற்போது புஷ்பா 2 திரைப்படத்தை பற்றி பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது புஷ்பா 2 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா பாட்னாவில் நடைபெற்றது. அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டனர். இது தொடர்பாக youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த நடிகர் சித்தார்த்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் இந்தியாவில் கூட்டம் கொடுவது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது என்றார். அதன் பிறகு கட்டுமான பணிகளுக்காக ஒரு ஜேசிபியை கொண்டு வந்து நிறுத்தினால் கூட கூட்டம் கூடும். பாட்னாவில் அவ்வளவு பெரிய கூட்டம் கூடியதற்கு மார்க்கெட்டிங் மட்டும்தான் காரணம். ஒரு பெரிய மைதானத்தை ஏற்பாடு செய்தாலும் கூட்டம் கூடும். இந்தியாவில் கூட்டம் கூடுவதற்கும் குவாலிட்டிக்கும் தொடர்பு கிடையாது. அப்படி பார்த்தால் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் கூட்டம் கூட தான் செய்கிறது. அப்படி இருக்கும்போது அவர்கள் ஏன் ஜெய்ப்பது கிடையாது. எல்லோருக்குமே கூட்டம் கூடத்தான் செய்கிறது. எனவே கைத்தட்டல்கள் மற்றும் கூட்டம் கூடுவது என்பது இயல்புதான். மேலும் கூட்டத்தை வைத்து எல்லாம் ஒரு படம் வெற்றி பெறும் என்று கூற முடியாது என்று கூறினார்.