பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் டாப்சி. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை டாப்ஸி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு காரில் ஏறுவதற்காக சென்றார். அப்போது ரசிகர்கள் அவரை செல்பி எடுப்பதற்காக அணுகியுள்ளனர். ஆனால் அவர்களை கண்டு கொள்ளாமல் டாப்சி அங்கிருந்து சென்று விட்டார்.

அப்போது ஒரு ரசிகர்  நடிகை டாப்ஸியை பின் தொடர்ந்து செல்பி எடுக்க கெஞ்சியுள்ளார். ஆனால் அவர்களை அங்கிருந்து தள்ளிப் போகுமாறு கூறிவிட்டு காரில் ஏறி சென்றுவிட்டார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் நடிகை டாப்ஸி மீது கோபத்தில் இருக்கிறார்கள். மேலும் படங்கள் ஓடாததால் அந்த கோபத்தை ரசிகர்கள் மீது காட்டுகிறீர்களா என்று அவர் மீது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)