
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சினேகா. இவரை ரசிகர்கள் புன்னகை அரசி என்று அழைத்தனர். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி சினிமாவிலும் நடித்துள்ளார். இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு நடிகை சினேகா படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இவர் தற்போது நடிகர் விஜய் நடிக்கும் தி கோட் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் நடிகை சினேகா ஒரு பேட்டியில் நான் ஒரு முறை அணிந்த ஆடையை மீண்டும் அணிய மாட்டேன் என கூறியுள்ளார். அதாவது நடிகை சினேகா அடிக்கடி ஒரே உடையை போடுகிறார் என்று பிரபல பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது. அவருக்கு அணிய வேறு உடைகள் இல்லையா என்றெல்லாம் கேட்டார்கள். அதிலிருந்து நான் ஒருமுறை அணிந்த உடையை மீண்டும் அணிய மாட்டேன். மேலும் நான் ஒரு முறை அணிந்த உடையை என்னுடைய நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு கொடுத்து விடுவேன் என்று கூறியுள்ளார்.