இந்தியாவில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து மாதம் தோறும் 12 சதவீதம் வரை பிடித்தம் செய்து வருகின்றது. ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு ஊழியர்கள் செல்லும் போது பழைய பி எப் எண்ணை புதிய பிஎப் கணக்குடன் இணைக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஊழியர்களே புதிய நிறுவனத்தில் வேலைக்கு சென்றதும் இபிஎப்ஓ இணையதள பக்கத்திற்குச் சென்று புதிய பிஎப் கணக்குகளை இணைக்க வேண்டும்.

இப்படி புதிய பிஎப் கணக்குடன் பழைய பிஎப் எண்ணை இணைக்காவிட்டால் பிஎப் பணத்தை எடுக்கும்போது உங்களுக்கு வரி விதிக்கப்படும். அதனைப் போலவே ஒவ்வொரு பிஎஃப் கணக்குகளும் தனித்தனியாக இருக்கும்போது ஒவ்வொரு நிறுவனத்திற்கும் என தனித்தனியாக டிடிஎஸ் செலுத்த வேண்டி இருக்கும். எனவே ஊழியர்கள் பழைய நிறுவனத்திலிருந்து புதிய நிறுவனத்திற்கு மாறும்போது கட்டாயமாக பழைய பி எப் எண்ணை புதிய பிஎப் கணக்குடன் இணைப்பது அவசியமாகும்.