
சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ ஒன்றில், புதுமண தம்பதிகள் தங்கள் முதல் இரவிற்காக அறையில் இருக்கும்போது, உறவினர்கள் புகுந்து இடத்தை ஆக்கிரமித்த சம்பவம் வைரலாகி உள்ளது. “ஃபூஃபாஜி” என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்ட நிலையில், 6.47 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இந்த நிலையில் உறவினர்கள் சிலர் முதலிரவு அறைக்குள் புகுந்து மணமக்களின் படுக்கையில் அமர்ந்து கொண்டனர்.
சிலர் தரையிலும் படுத்துக்கொண்டு பேசிக்கொண்டிருப்பதை அந்த வீடியோவில் காணலாம். இதனால், புதுமண தம்பதிகள் நாற்காலியில் அமர்ந்து தான் இரவைக் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உறவினர்களின் இச்செயல், மணமக்களின் தனிப்பட்ட விருப்பத்தை முற்றிலும் புறக்கணிக்கும் விதமாக இருந்ததாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
View this post on Instagram