தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் சமீபத்தில் “கங்குவா” எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்  நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக “சூர்யா 44” என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்த படத்தில் பூஜா ஹெட்டே மற்றும் சூர்யா இடையிலான சில காட்சிகள் ஊட்டியில் வைத்து எடுக்கப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகள் எடுத்துக் கொண்டிருந்தபோது நடிகர் சூர்யாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த படத்தின் ஷூட்டிங் உடனடியாக நிறுத்தப்பட்டது. மேலும் நடிகர் சூர்யா  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவரின் ஆலோசனைப்படி ஓய்வெடுத்து வருகிறார்.