
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியில் சோலாடா மட்டம் பகுதியைச் சேர்ந்த முருகையா(26) என்பவர் வேலை பார்த்துள்ளார். அவருடன் ஒரு சில பணியாளர்களும் நின்று இருந்தனர். இந்த நிலையில் கட்டடத்தை இடிக்கும் போது எதிர்பாராதவிதமாக கட்டிட சுவர் பணியாளர்கள் மீது விழுந்தது.
அதில் இடிபாடுகளில் சிக்கி முருகையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று முருகையாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.