ஏபி டி வில்லியர்ஸ் இல்லையென்றால் டி20 கிரிக்கெட்டில் 200 ரன்களை கடந்திருக்க முடியும் என்று டி20 கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 2013 சீசனில் புனே வாரியர்ஸுக்கு எதிராக கெயிலின் 175* ரன், டி20 ஆட்டத்தில் ஒரு தனிநபரின் அதிகபட்ச ஸ்கோராக இன்னும் உறுதியாக உள்ளது. இந்நிலையில் ஜியோசினிமா பிளாட்பாரத்தில் ராபின் உத்தப்பாவுடனான உரையாடலில் பேசிய கெய்ல், பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தபோது டி வில்லியர்ஸுக்கு ஸ்ட்ரைக் கொடுக்க ஆர்.சி.பி டக்அவுட் தன்னைப் பார்த்து கத்துகிறது என்று கேலியாக கூறினார்.

இதுகுறித்து கெய்ல் கூறியதாவது, ஏபி வந்து 8 பந்துகளில் 30 ரன்களை எடுத்தார் ‘கிறிஸ், அவருக்கு ஸ்ட்ரைக் கொடுங்கள்’ என்பது போல் கூறினார்கள். இல்லையென்றால், நான் 215 எடுத்திருப்பேன். மேலும் அவருக்கு ஸ்ட்ரைக் கொடுத்திருக்க கூடாது என்று நகைச்சுவையாக கூறினார். மேலும் ஐபிஎல்லில் மற்ற உரிமையாளர்களுக்காக விளையாடினாலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக தான் இன்னும் அறியப்படுகிறேன் என்று கூறிய கெய்ல், ஆர்சிபிக்கு உலகின் சிறந்த ரசிகர் பட்டாளம் இருப்பதாக கூறினார்.

“ஆர்சிபி நான் அனுபவித்த சிறந்த ரசிகர் பட்டாளங்களில் ஒன்றாகும். சின்னசாமி ஸ்டேடியம் முழக்கமிடத் தொடங்கியதும் ‘ஆர்சிபி! RCB!’ இது சிறந்தது. ஆர்சிபிக்கு சிறந்த ரசிகர்கள் உள்ளனர் என்று கெய்ல் கூறினார். அதேபோல தான் எதிர்கொண்ட சிறந்த பந்து வீச்சாளரைப் பற்றிப் பேசிய கெய்ல், “அவர் பிறக்கவில்லை” என்று கூறினார்.

அதாவது, 2013 இல் புனே வாரியர்ஸ் இந்தியாவிற்கு எதிராக ஆர்சிபி அணிக்காக  ஆடியபோது, ​​ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் எடுத்தபோது ஏபி டி வில்லியர்ஸுக்கு ஸ்டிரைக் கொடுக்கும்படி தனது சக வீரர்கள் கேட்காமல் இருந்திருந்தால், தன்னால் 215 ரன்கள் எடுத்திருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.. புனே வாரியர்ஸுக்கு எதிராக கெய்ல் 66 பந்துகளில் 175 ரன்கள் எடுத்தார். அதில் 17 சிக்ஸர், 13 பவுண்டரி அடங்கும்.. ஸ்ட்ரைக்ரேட் 265.15 என்பது குறிப்பிடத்தக்கது.