
பொதுவாக தற்போது கேஸ் சிலிண்டர் அனைவருமே பயன்படுத்துகிறார்கள். நாடு முழுவதும் நகரம் முதல் கிராமங்கள் வரை பெரும்பாலான மக்கள் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் நிலையில் இனி கைரேகை பதிவு செய்தால் மட்டும் தான் கேஸ் சிலிண்டர் கிடைக்கும் என்ற ஒரு செய்தி தீயாக பரவி வருகிறது. அதன்படி ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த புதிய விதிமுறை அமலுக்கு வரும் என்றும் இனி கைரேகை பதிவு செய்யாதவர்களுக்கு கேஸ் சிலிண்டர் கிடைக்காது என்றும் கூறப்பட்டது. ஆனால் அந்த தகவலில் தற்போது உண்மை இல்லை என்று தெரியவந்துள்ளது. அதாவது ஆதார் அட்டையை சரி பார்ப்பதற்காக கைரேகையை பதிவு செய்ய விட்டாலும் கேஸ் சிலிண்டர் கிடைக்கும் என்று எல்பிஜி கேஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
இதனால் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கைரேகை பதிவு செய்ய விட்டாலும் வழக்கம் போல் சிலிண்டர் கிடைக்கும் என்பது உறுதியாகிவிட்டது. கடந்த சில மாதங்களாக எல்பிஜி கேஸ் சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு அவர்களுடைய வீடுகளுக்கு சென்று பயோமெட்ரிக் விவரங்களை சேகரித்து வருகிறார்கள். இதற்காக 70 முதல் 80 சதவீத பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயோமெட்ரிக் விவரங்களை சரிபார்த்து ஆதார் அட்டையில் இருப்பது உங்களுடைய விவரங்கள் தானா என்பதை ஊழியர்கள் உறுதிப்படுத்திக் கொள்வார்கள். மேலும் மானியத்துடன் கூடிய கேஸ் சிலிண்டரை பயன்படுத்தும் நுகர்வோர்களால் வழங்கப்படும் ஆதாரை சரி பார்ப்பதற்காக இந்த முறை பயன்படுத்தப்படுகிறது என்று கூறப்படுகிறது.