தேர்தல் பத்திர முறை மீண்டும் கொண்டு வரப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், அரசமைப்புச் சட்டத்தையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் எள்ளளவும் மதிக்காத ஒன்றிய நிதியமைச்சரின் ஆணவம். தேர்தல் பத்திரங்களை மீண்டும் கொண்டு வருவாராம். கருப்பு பணத்தை ஒழித்து விட்டீர்கள், ஊழலையும் ஒழித்து விட்டீர்கள்.

அரசு அமைப்புகளை வைத்து கட்ட பஞ்சாயத்து நடத்தி கோடி கோடியாய் கொள்ளையடிக்க தேர்தல் பத்திர சட்டத்தை கொண்டு வந்து கல்லா கட்டியதை தவிர வேறு என்ன செய்தீர்கள். எவ்வளவு துணிச்சல் இருந்தால் மக்கள் நலன் சார்ந்த ஒரு தேர்தல் அறிக்கை கூட தர முடியாத பாஜக, ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரங்களை மீண்டும் கொண்டு வருவோம் என சொல்கிறது என தெரிவித்துள்ளார்.