நீலகிரி மாவட்டம் கூடலூர் நகருக்குள் காட்டு யானை ஒன்று தினமும் வந்து அங்குள்ள வாழை மரங்களை சேதப்படுத்தி, பொதுமக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.    கடந்த சில தினங்களுக்கு முன், காலை வேளையில் எம்.ஜி.ஆர் நகர் வழியாக கோழிக்கோடு சாலையில் காட்டு யானை ஒன்று ஓடி அங்குள்ள பொதுமக்கள் மற்றும் சாலையில் வரும் வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து நேற்று முன்தினம் மாலை நேரத்தில் தோட்டமூலா என்ற பகுதிக்கு காட்டு யானை வந்து, அந்த பகுதியில் உள்ள விளைநிலங்களை சேதப்படுத்தியதால்,   விவசாயிகளுக்கு  பெரும் நஷ்டத்தை  ஏற்படுத்தி உள்ளது.  மேலும் தங்களது அன்றாட பணிகளை செய்ய முடியாமல் பொதுமக்கள் அச்சத்தில் வீடுகளுக்குள் முடங்கினர்.

இந்நிலையில் அட்டகாசம் செய்யும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை வனத்துறையினர் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே வனத்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, யானை ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.