நடிகர் நாக சைதன்யா சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக  பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் நாக சைதன்யா சோபிதாவை காதலித்து வந்தார்.  அதன் பிறகு கடந்த வருடம் அவர்கள் இருவரும்  திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் காதலை அறிவித்ததில் இருந்து சமூக வலைதளங்களில் அதிகமாக மோசமான கமெண்டுகள் தான் வந்து கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம். ஏனெனில் சமந்தா ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நாக சைதன்யா- சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆன தண்டேல் படம் நல்ல வரவேற்பு பெற்று ஹிட் அடித்தது. தண்டேல் படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் நாக சைதன்யாவின் அப்பா நாகார்ஜுனா, தன்னுடைய மகன் ஹிட் படம் கொடுப்பதை பெருமையாக பேசி உள்ளார்.

தான் வெற்றி விழாவிற்கு வந்தே நீண்ட காலம் ஆகிவிட்டது என்றும் கூறியுள்ளார். மேலும் எல்லாம் என்னுடைய மருமகள் சோபிதா வந்த நேரம் தான் விசேஷம் என்று அவர் பெருமையாக பேசி உள்ளார். அவர் சொன்னதை கேட்டு அரங்கத்தில் இருந்தவர்கள் கத்தி ஆரவாரம் செய்துள்ளார்கள்.