தமிழக ஆளுநர் ரவி இரண்டு நாள் சுற்றுப்பயணம் ஆக ராமநாதபுரம் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். இந்நிலையில் ராமநாதபுரத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவ மாணவர்களிடையே ஆளுநர் ரவி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், செல்போன் போன்ற பொழுதுபோக்குகளில் கவனத்தை திசை திருப்பாமல் நன்றாக படிக்க வேண்டும். மனதை ஒருமுகப்படுத்துவதற்கு யோகாசனம் செய்யுங்கள்.

விளையாட்டில் சாதித்தால் வாழ்க்கையில் ஒளிரலாம். என் பணியில் எப்போது சலிப்பு ஏற்படுகிறதோ அப்பொழுது நான் பதவி விலகுவேன். இந்தியாவின் பிரகாசமான மகான்களில் ஒருவரான அப்துல் கலாம் ஒரு சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்து தன்னுடைய கனவை நம்பி கடுமையாக உழைத்து உயர்ந்தார் என்று கூறியுள்ளார்