நீட் தேர்வுக்கு எதிராக திமுக இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவ அணி சார்பில் மதுரையை தவிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் நிலையில் உங்க அண்ணா நகர் பகுதி செயலாளர் ராமலிங்கம் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது திமுக அரசு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.