
செல்வராகவன் தனது தம்பி தனுஷை வைத்து காதல் கொண்டேன் படத்தை இயக்கி அதன் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுத்தார். அதன் பிறகு 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன என பல படங்களை இயக்கி பிரபலமானார். தனுஷ், யுவன் சங்கர் ராஜா, செல்வராகவன் கூட்டணி அமைந்தாலே அந்த படம் வெற்றி என்று அடிச்சு சொல்லலாம். அந்த அளவிற்கு அருமையாக இருக்கும். செல்வராகவன் இயக்குனர் என்பதையும் தாண்டி நடிகராகவும் கவனம் ஈர்த்து வருகிறார்.
இந்த நிலையில் செல்வராகவன் குறித்து அவருடைய தந்தை கஸ்தூரிராஜா கூறிய விஷயம் வைரலாக பரவி வருகிறது. அதாவது,” செல்வராகவனை சிலரிடம் உதவி இயக்குனராக சேர்க்கும் முயற்சி செய்தேன். ஆனால் என்னுடைய மகன் என்ற காரணத்தால் அவரை யாருமே சேர்த்துக் கொள்ளவில்லை. சினிமா நட்சத்திரங்களின் வாரிசுகள் கண்டிப்பாக சினிமாவில் பணிபுரிய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் தலையெழுத்து இருந்தால் வந்து தான் ஆக வேண்டும்” என்று கூறியுள்ளார்.