தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இன்று பிறந்தநாள். நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 74-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகராக கொடிகட்டி பறக்கும் ரஜினிகாந்துக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

அதன்படி அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், எல்லைகளை கடந்து ஆறிலிருந்து அறுபது வரை தன்னுடைய நடிப்பால் ஸ்டைலால் ரசிகர்கள் ஆக்கிக் கொண்ட அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். மேலும் திரை உலகில் தொடர் வெற்றிகளை குவித்து வரும் தாங்கள் எப்போதும் அமைதியோடு மன மகிழ்ச்சியோடும் திகழ்ந்து மக்களை மகிழ்வித்திட வேண்டும் என்று வாழ்த்துவதாக பதிவிட்டுள்ளார்.