2023 உலகக் கோப்பைக்கான இந்திய அணி ஷிகர் தவான், வரவிருக்கும் பெரிய போட்டிக்கு இந்திய அணிக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட அணி ஐசிசி கோப்பையை கொண்டு வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அக்டோபர் 5-ம் தேதி முதல் ஒரு நாள் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறவுள்ளது. தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளும், பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 14-ம் தேதியும் மோதுகின்றன. இந்தப் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்தியா பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8ஆம் தேதி எதிர்கொள்கிறது. ஆசியக் கோப்பையை போலவே இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானும் உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் ஷிகர் தவான் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். இதற்கிடையே தேர்வுக்குழு மீது விமர்சனமும் எழுந்து வருகிறது. இந்த சூழலில் பெரிய போட்டிக்கு டீம் இந்தியாவுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார் ஷிகர் தவான்.

பிசிசிஐயின் பதிவில் கருத்து தெரிவித்த தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், “2023 உலகக் கோப்பையில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட எனது சக வீரர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். 1.5 பில்லியன் மக்களின் பிரார்த்தனை மற்றும் ஆதரவுடன், எங்கள் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளை சுமந்து செல்கிறீர்கள். நீங்கள் உலகக் கோப்பை கோப்பையை வீட்டிற்கு (நாட்டிற்கு) கொண்டு வந்து எங்களை பெருமைப்படுத்துங்கள்.” ஆல் அவுட் கோ, டீம் இந்தியா!” என தெரிவித்துள்ளார்.. இந்த பதிவிற்கு ரசிகர்கள் ஷிகர் தவானை புகழ்ந்து நெகிழ்ந்து பதிவிட்டு வருகின்றனர்.. தான் அணியில் இடம்பெறாத போதிலும் எந்தவித கஷ்டத்தையும் வெளிப்படுத்தாமல் வாழ்த்து தெரிவித்ததற்கு ரசிகர்கள் கலங்கிய கண்களுடன் இதயத்தை வென்றுவிட்டதாகவும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணி :

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி,  முகமது சிராஜ்.

இந்தியாவின் உலகக் கோப்பை போட்டிகள் :

 இந்தியா vs ஆஸ்திரேலியா – அக்டோபர் 8 (சென்னை), இந்தியா vs ஆப்கானிஸ்தான் – அக்டோபர் 11 (டெல்லி), இந்தியா vs பாகிஸ்தான் – அக்டோபர் 14 (அகமதாபாத்), இந்தியா vs பங்களாதேஷ் – அக்டோபர் 19 (புனே), இந்தியா vs நியூசிலாந்து – அக்டோபர் 22 (தர்மசாலா), இந்தியா vs இங்கிலாந்து – அக்டோபர் 29 (லக்னோ), இந்தியா vs இலங்கை – நவம்பர் 2 (மும்பை) இந்தியா vs தென் ஆப்பிரிக்கா – நவம்பர் 5 (கொல்கத்தா), இந்தியா vs நெதர்லாந்து – நவம்பர் 12 (பெங்களூர்).