
டச்சு நாட்டைச் சேர்ந்த ஃபேஷன் பிராண்ட் மெர்ராச்சி. இந்த பிராண்ட் சர்ச்சைக்குரிய விளம்பர வீடியோவை வெளியிட்டது. பிரான்ஸ் நாட்டில் உள்ள புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் மீது ஹிஜாப் இருப்பது போல சித்தரிக்கப்பட்டு அந்த வீடியோவில் வெளியிட்டுள்ளனர். மெர்ராச்சி அணிந்த ஈபிலர் கோபுரம்… மாஷா அல்லா… அவள் இப்போதுதான் அடக்கமான ஃபேஷன் சமூகத்தில் இணைந்ததாக தெரிகிறது என வீடியோ கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளனர். இஸ்லாமிய உடை மீதான பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாடுகளை மையமாகக் கொண்டு அந்த விளம்பர வீடியோ உருவாக்கப்பட்டதாக தெரிகிறது.
மேலும் பிரான்ஸ் நாட்டின் சின்னங்கள் மற்றும் இஸ்லாமிய சின்னங்கள் இணைக்கப்பட்டதாக கூறி பிரெஞ்சு நாட்டின் அரசியல்வாதிகளும், மக்களும் அந்த விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நேஷனல் ராலி கட்சியை சேர்ந்த பிரான்ஸ் எம்பியான லிஸ்ட் புல்லட் கூறியதாவது, பிரான்சின் ஜனநாயக கொள்கைகள் மற்றும் பாரம்பரியத்திற்கு ஆபத்தாக இந்த விளம்பரம் பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டின் அடையாளமாக இருப்பது ஈபிள் கோபுரம். அந்த கோபுரத்திற்கு ஹிஜாப் அணிவித்து அதனை மெர்ராச்சி பிராண்டு கடத்தி விட்டதை ஏற்றுக் கொள்ள இயலாது என கூறியுள்ளார். இதனையடுத்து நேஷனல் ராலி கட்சியை சேர்ந்த ஜெரோம் என்பவர் ஒரு திகிலூட்டும் அரசியல் திட்டம். இது ஏற்றுக்கொள்ள இயலாத தூண்டுதல் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து குடிமக்கள் அரசியல் இயக்கத்தின் இணை நிறுவனரான பிலிப் முரோர் மெர்ராச்சி கடைகளை மூட வேண்டும்.
அதன் இணையத்தை முடக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் சிலர் சிறந்த மார்க்கெட்டிங் முறை சிறந்த படைப்பாற்றலின் வெளிப்பாடு என அந்த வீடியோவுக்கு கருத்து தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் நாட்டின் பொது இடங்களில் முகமூடிகள், தலை கவசங்கள், புர்கா நிக்கா போன்ற முழு உடல் முக்காடுகளை தடை செய்யும் சட்டத்தை பிரான்ஸ் கடந்த 2010-ஆம் ஆண்டு இயற்றியது. அந்த சட்டத்தை மனித உரிமைக்கான ஐரோப்பிய நீதிமன்றம் 2014-ல் உறுதி செய்தது. பிரெஞ்சு அரசு நடத்தும் பள்ளிகளில் அபாயாக்கள் அணிவதற்கு சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
View this post on Instagram