மலையாள சினிமாவில் நடிக்க தொடங்கி பிறகு தமிழ் பக்கம் வந்தவர்தான் மஞ்சிமா மோகன். கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு இப்படை வெல்லும், சத்ரியன், தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். சுழல் -2 வெப் சீரிஸில் நடித்தார். இதில் இவருடைய நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சினிமாவில் அவ்வளவாக ஆக்டிவா இல்லாமல் இருந்தாலும் இவரை இன்ஸ்டால் 2 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்கள் பாலோ செய்து வருகிறார்கள். இந்நிலையில் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் காலை 6 மணிக்கு ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கேப்ஷனாக 50 சதவீதம் உடற்பயிற்சி.. 50% உடற்பயிற்சி என்பது எவ்வளவு கடினம் என்று புலம்புவது.. ஆனாலும் என்ன செய்ய உடற்பயிற்சி தினமும் செய்துதான் ஆக வேண்டும் என்று கூறினார்.