
அமெரிக்காவில் இசைக்கருவிகளை விற்கும் நிறுவனம் இயங்குகிறது. இந்த நிறுவனத்தில் மீட்டிங் வராத 99 ஊழியர்களின் சி.இ.ஓ அதிரடியாக வேலையில் இருந்து தூக்கிவிட்டார். அதில் ஒருவர் அந்த பணிக்கு 1 மணி நேரத்திற்கு முன்புதான் சேர்ந்துள்ளார். தனது சமூக வலைதள பக்கத்தில், இன்டர்ன்ஷிப்புக்கு சேர்ந்த ஒரு மணி நேரத்தில் நிறுவனத்தின் சிஇஓ தன்னுடன் சேர்த்து 99 பேரை பணி நீக்கம் செய்து விட்டதாக புலம்பியுள்ளார்.
சி.இ.ஓ அன்றைய தினம் 111 பேரை மீட்டிங்கிற்கு அழைத்துள்ளார். ஆனால் 11 பேர் மட்டுமே மீட்டிங்கிற்கு வந்தனர். இதனால் கோபமடைந்த சிஇஓ மீட்டிங் வராத அனைவரையும் பணி நீக்கம் செய்தார். புதிதாக வேலைக்கு சேர்ந்த அந்த வாலிபர் மீட்டிங் குறித்து எதுவும் தன்னிடம் தெரிவிக்கவில்லை என புலம்பி வருகிறார்.