பிரபல தயாரிப்பாளர் வி.சேகர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், நடிகர் வடிவேல் குறித்து பகிரங்க தகவல் ஒன்று பகிர்ந்துள்ளார் . அதில் கேப்டனை வடிவேலு அவ்வளவு அசிங்கமாக பேசினார். அவர் அப்படி பேசி இருக்க கூடாது. காரணம் என்ன என்றால், கேப்டன்  உதவும் குணம் கொண்டவர். ஆனால் வடிவேலு அதையெல்லாம் மறந்துவிட்டு அவரை தாறுமாறாக பேசினார். வடிவேலுவால் எனக்கு ஒரு பாதிப்பு வந்தது.

நான் எடுத்த ஒரு படத்தில் என்னுடைய மகனை நடிக்க வைக்க விரும்பினேன். அந்த படத்தில் வடிவேலுவை நடிக்க வைப்பதற்கான முயற்சிகளில் இறங்கினேன். படத்தின் வேலைகள் ஆரம்பித்த பிறகு திடீரென்று வடிவேலு நான்  தேர்தலில் பிரச்சாரம் செய்யப் போகிறேன். ஆகையால் பட சம்பந்தமான வேலைகளை ஒரு மாதம் தள்ளி போடுங்கள் என்று கூறினார். அந்த தேர்தலில் வேறு ஒரு கட்சி ஜெயித்தது. மேலும் தான் மதுரை சென்று விட்டதாகவும், கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு அங்கு வரமாட்டேன் என்றும் கறாராக கூறிவிட்டார். இதனால் என்னுடைய மகன் வாழ்க்கை பாதிக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.