
தமிழ் சினிமாவில் மதயானை கூட்டம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். இந்த படம் வணிக ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் அவர் அடுத்ததாக நடிகர் சாந்தனுவை வைத்து ராவணக்கோட்டம் என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் விக்ரம் சுகுமாரன் தன்னை ஜாதி வெறி பிடித்தவன் என்று அடையாளம் காட்டுவதாக வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, மதயானை கூட்டம் படம் வெளியான போது நான் குறிப்பிட்ட ஜாதியை உயர்த்தி பேசுவதாக விமர்சனம் எழுந்தது. ஆனால் நான் ஜாதி அமைப்பை முற்றிலும் எதிர்ப்பவன். மதயானை கூட்டத்தில் சொல்லப்பட்ட கதை முற்றிலும் வேறு. ஆனால் என்னை ஜாதி வெறியன் என்று அடையாளப்படுத்தினர். மேலும் அது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது என்று கூறியுள்ளார்.