மலையாள திரை உலகின் முன்னணி இயக்குனர் சனல் குமார் சசிதரன் மீது நடிகை ஒருவர் கொச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சமூக வலைதளத்தில் தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாக கூறி அந்த நடிகை புகார் அளித்துள்ளார்.

இதனை இயக்குனர் சசிதரன் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து தனக்கு எதிராக வேறு யாரோ நடிகையின் பெயரில் புகார் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டும் இதே நடிகை இயக்குனர் சசிதரன் மீது புகார் கொடுத்து அவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியில் வந்தது குறிப்பிடத்தக்கது.