தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் நடிகர் விஜயை வைத்து “தி கோட்” எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என படகு குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், லைலா, மீனாட்சி சவுத்ரி, அஜ்மல், ஜெயராம், மோகன், பிரேம்ஜி, வைபவ், யோகி பாபு போன்ற பல நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் நேற்று சென்னையில் மிக பிரம்மாண்டமாக படக்குழுவினர் வெளியிட்டனர். அப்போது செய்தியாளர்களை இயக்குனர் வெங்கட் பிரபு சந்தித்து பேட்டி அளித்தார். அதில் ஒருவர் நடிகர் விஜய் இதற்கு முன்பு நடித்த படங்களில் கட்சிக்கொடி, மோதிரம் போன்றவற்றை இடம்பெற்று இருக்கும் அதேபோல் இந்த படத்திலும் ஏதாவது காட்சி இருக்கிறதா? என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு வெங்கட் பிரபு அதுபோல எந்த காட்சிகளும் இந்த படத்தில் இடம்பெறவில்லை எனவும் நடிகர் விஜய் படத்தை படமாக தான் பார்க்கிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும் அவரிடம் மங்காத்தா படத்தில் அஜித் பேசிய வசனத்தை விஜயும் பேசுகிறாரே? இந்த வசனம் அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்துவதற்காக வா? எனவும் கேள்வி எழுப்பினார் அதற்கு அவர் இது என்னுடைய டயலாக் மங்காத்தா படத்தில் அஜித்தை நான் தான் பேச வைத்தேன் அதை போல் தற்போது விஜயையும் நான் தான் பேச வைத்துள்ளேன் என்றும் பதிலளித்துள்ளார்.

மேலும் அவரிடம் கோட் படத்தில் விஜய் நடிக்கும் போது தான் சினிமாவை விட்டு விலகி அரசியல் ஈடுபடப் போவதாக சொல்லி இருக்கிறார். அப்போது அதற்கு காரணம் நீங்கள் தானா? என்று கேட்டனர். அதற்கு இயக்குனர் வெங்கட் பிரபு அவரிடம் என் சினிமாவில் தொடர்ந்து நடிக்கலாமே என்று கேட்டேன் அதற்கு அவர் அடவிடு அப்புறம் பாக்கலாம் என்றார் மற்றபடி அவர் அரசியல் குறித்து வேறு எதுவும் பேசியதே இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.