
ஆந்திராவில் கேசமுத்திரம் என்ற பகுதி உள்ளது. இங்கு பழமை வாய்ந்த முத்தியாலம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு பக்தர்கள் ஆடு, கோழி, சேவல் போன்றவற்றை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். அந்த வகையில் ஒருவர் சேவலை காணிக்கையாக செலுத்த வந்தார்.
அப்போது அதன் றெக்கைகளில் வண்ணங்கள் தீட்டப்பட்டிருந்த நிலையில், காதுகளில் ஜிமிக்கி கம்மல் போடப்பட்டிருந்தது. அதாவது அவர் சேவலை அலங்கரித்து காணிக்கை செலுத்துவதாக வேண்டி இருந்ததால் அப்படி செய்ததாக கூறியுள்ளார். மேலும் இதனைப் பார்த்து அங்கிருந்தவர்கள் ஆச்சரியப்பட்டனர்.