
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் நாகார்ஜுனா முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் நடிகை ராஸ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் மும்பை தாராவியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ஆகும்.
இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள நிலையில் பான் இந்தியா மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படம் வருகிற 20 ஆம் தேதி வெளியாகும் நிலையில் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.
அந்த வகையில் வட இந்தியாவில் உள்ள ஒரு பகுதியில் நடைபெற்ற பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் உட்பட பலர் கலந்து கொண்ட போது தொகுப்பாளினி ஹிந்தியில் பேசினார். அப்போது நடிகர் தனுஷ் தமிழில் பேச ஆரம்பித்த நிலையில் எனக்கு ஹிந்தி தெரியாது என்று கூறினார்.
அவர் எனக்கு ஹிந்தி தெரியாது ஆங்கிலம் தான் தெரியும் அதுவும் கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியும் தெரிந்த வரைக்கும் பேசுகிறேன் என்று கூறியதும் அங்கிருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் தனுஷ் தைரியமாக ஹிந்தி தெரியாது தமிழில் தான் பேசுவேன் எனக் கூறியதை புகழ்ந்து வருகிறார்கள்.
Unstoppable energy of D 🔥
@dhanushkraja Speech at #Kuberaa3rdSingle launch ✨#Kuberaa in cinemas June 20, 2025.#PippiPippiDumDumDum #SekharKammulasKuberaa #KuberaaOn20thJune pic.twitter.com/w1IRjFMFW4— Kuberaa Movie (@KuberaaTheMovie) June 10, 2025