தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் வனிதா விஜயகுமார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இவருக்கு ஏற்கனவே 3 முறை‌ திருமணம் ஆகி விவாகரத்து ஆன நிலையில் இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் பவர் ஸ்டாரை திருமணம் செய்ய இருப்பதாக சமீப காலமாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் தற்போது வைஜெயந்தி ஐபிஎஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படத்தின் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் வனிதா விஜயகுமார் பவர் ஸ்டார் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது வனிதா விஜயகுமாரும் பவர்ஸ்டரும் கலகலப்பாக உரையாடினார்கள்.

அவர்கள் பேசிய விஷயம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நிகழ்ச்சியின் போது தோழி என்று பவர் ஸ்டார் கூறிய நிலையில் உடனே இடைமறித்த வனிதா தோழி என்று கூறுகிறீர்களே நமக்கு ஏற்கனவே திருமணம் செய்து வைத்து விட்டார்கள். நான் ஊருக்கு சென்றபோது நீங்கள் என்னை திருமணம் செய்து கொண்டதாக கூறுகிறார்கள் என்றார். நான் வெளியூருக்கு செல்லும்போது பவன் கல்யாணை திருமணம் செய்து ‌ கொண்டீர்களா என்று கேட்கிறார்கள். நான் அதற்கு பவர் ஸ்டார் சீனிவாசனை தான் திருமணம் செய்துள்ளேன் என்று கூறினேன். உங்களை திருமணம் செய்து இதுவரை ஒன்னும் நடக்கவில்லை என்று கூறினார். இதற்கு நடிகர் பவர் ஸ்டார் ஆம் அதற்கு என்ன ‌ செய்வது. நீங்கள் தாய்லாந்துக்கு சென்று விடுகிறீர்கள். நானும் அடிக்கடி வெளியூருக்கு சென்று விடுகிறேன். இதனால் நானும் இங்கு இருப்பதில்லை. எனவே ஒரு நாள் ஹனிமூனுக்கு நாள் குறித்து விடலாம் என்று கூறினார்.