தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரான கௌதம் வாசுதேவ் மேனன் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவரது இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் டோமினிக் திரைப்படம் வருகின்ற 23ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் கௌதம் வாசுதேவ் மேனன் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அப்போது அவர் கூறுகையில் “கேமரா முன் நின்று நடிப்பதற்கு எனக்கு சுத்தமாக பிடிக்காது. சில சூழ்நிலைகளாலும் இயக்குனர்களின் அழைப்பை மறுக்க முடியாத காரணத்தினாலும் தான் படங்களில் நடித்துள்ளேன். தற்போது டிராகன் மற்றும் டிடி ரிட்டன்ஸ் படத்தில் நடித்து வருகிறேன். ஆனால் இதுவரை படத்தில் நடித்ததற்காக நான் வருத்தப்பட்டதில்லை” எனக் கூறியுள்ளார்.