
நடிகை சாய் பல்லவி பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், நான் பொதுவாக வதந்திகள் பற்றி பெரிதும் கண்டுகொள்ள மாட்டேன். ஆனால், அதுவே என் நண்பர்கள், உறவினர்களை உள்ளடக்கி வரும் போது நான் பேசியாக வேண்டும். எனது புதிய படத்தின் பூஜையின் போது எடுத்த புகைப்படத்தை பணம் கொடுத்து அருவெறுக்கத்தக்க நோக்கத்துடன் பரப்புகின்றனர்.
இப்படி வேலை இல்லாதவர்களுக்கு விளக்கமளிக்க வேண்டியிருப்பது வேதனையளிக்கிறது என தெரிவித்துள்ளார். இயக்குநர் ஒருவருக்கும் சாய்பல்லவிக்கும் திருமணம் நடந்துவிட்டது என போட்டோ ஒன்று வைரலான நிலையில் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் சாய்பல்லவி.