
விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை தொகுத்து வழங்கினார். அதன் பிறகு நடிப்பில் பிசியாகி தற்போது படங்களில் நடித்து வருகிறார். அவர் கைவசம் தற்போது டிரெயின் என்ற படம் உள்ளது. இந்த படத்தை மிஸ்கின் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். மேலும் பாண்டி ராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். மேலும் இன்னும் சில படங்களும் அவர் கைவசம் உள்ளது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய இவர், தனக்கு ஏழரை சனி இருப்பதாகவும் அதனால் தன்னை சினிமா விட்டு வெளிநாடு போக சொன்னார்கள் என்றும் பேசியுள்ளார்.
அதாவது, “உங்களுக்கு ஏழரை சனி புடிச்சிருக்கு. இன்னும் பத்து வருஷம் கழித்து தான் சினிமாவில் கொடி கட்டி பறக்க முடியும். அதனால் திரும்ப வெளிநாட்டுக்கே வேலைக்கு போயிடுங்கன்னு சொன்னாங்க. அதற்கு நான் ஏழரை சனி புடிச்சா ரொம்ப நல்லதுன்னு சொன்னேன். எனக்கு வேலை தெரியணும் நான் பாட்டுக்கு போயிட்டா வேலையை எவன் கற்றுக் கொடுப்பான். இங்கு இருந்தால் தான் கத்துக்க முடியும்,. அதனால ஏழரை சனி புடிக்கிறது ரொம்ப நல்லது. நான் சினிமாவுக்கு கஷ்டப்பட்டு வரல. கத்துகிட்டு வந்திருக்கேன்” என்று கூறியுள்ளார்.