
இப்போது எங்கு பார்த்தாலும் டிஜிட்டல் மயம் தான் உள்ளது. சென்னை மாநகராட்சியில் இருக்கும் 8,340 சாலை பெயர் பலகைகள் டிஜிட்டல் மயமாக மாற இருக்கிறது. இந்த நிலையில் பழைய பெயர் பலகைகளை அகற்றிவிட்டு ரூபாய் 15 கோடி செலவில் புதிதாக பெயர் பலகை அமைக்க பணி ஆணை வழங்குவது குறித்து மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.