
கோலிவுட் வட்டாரத்தில் தனுஷ் மற்றும் நயன்தாரா பிரச்சனை தான் ஹாட் டாபிக்காக இருக்கிறது. அதாவது நயன்தாரா நடித்த ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில் அதில் நானும் ரவுடிதான் பாடல் காட்சிகள் இடம் பெற்றதால் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகர் தனுஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதன் காரணமாக நடிகர் தனுஷை சரமாரியாக விமர்சித்த நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக பிரபல youtube சேனல் ஒன்று அளித்த பேட்டியின் போது ஆர் ஜே பாலாஜி கருத்து தெரிவித்தார்.
அவர் கூறும்போது, பேய்க்கும் பேய்க்கும் சண்டை அதை ஊரே வேடிக்கை பார்க்கிறது என்று கூறுவது போல் ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம். அதுவே கூத்தாடி ரெண்டு பட்டா ஊருக்கு கொண்டாட்டம் என்பது போல், இந்த விஷயத்தில் தனுஷே பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். அப்படி இருக்கும்போது நாம் கருத்து சொல்ல என்ன இருக்கிறது. மேலும் இது அவர்களுடைய பிரச்சனை. அவர்கள் இருவரும் பேசி தீர்த்துக் கொள்வார்கள் என்று கூறினார்.