ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை மட்டும் நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி ஆவினில் பால், வெண்ணெய், நெய், பால்கோவா, ஐஸ்கிரீம் போன்ற பல்வேறு பால் தொடர்பான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் அனுமதிக்கப்பட்ட மைக்ரான் அளவில் தான் ஆவின் பால் பாக்கெட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன; சுற்றுச்சூழலுக்கு பாதகம் ஏற்படுத்தும் எந்த முயற்சியிலும் ஆவின் நிர்வாகம் ஈடுபடாது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். நிர்ணயித்ததை விட கூடுதல் விலைக்கு ஆவின் பால் பாக்கெட் விற்றால் நடவடிக்கை பாயும் என எச்சரித்த அவர், பண்டிகை காலங்களில் ஆவின் இனிப்புகள் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.