
சின்னத்திரையில் தொடங்கி வெள்ளித்திரை வரை பிரபலமானவர்தான் நடிகர் மதுரை முத்து. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக நகைச்சுவை செய்து மக்களை மகிழ்வித்து வருகின்றார். இவருடைய காமெடிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. கடி ஜோக்கை சொல்லிவிட்டு அதனை சமாளிப்பதற்கு இவர் சொல்லக்கூடிய நகைச்சுவை தான் அல்டிமேட் ஆக இருக்கும். நகைச்சுவையில் கொடி கட்டி பறக்கும் கலைஞர்களில் ஒருவரான மதுரை முத்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு பத்தாவது சீசனில் நடுவராக உள்ளார்.
மதுரை முத்துவின் முதல் மனைவி சாலை விபத்தில் இறந்த பிறகு அவர் நீத்து என்ற டாக்டர் பின்னணி திருமணம் செய்து கொண்டார். தற்போது நீத்து வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி இருக்கிறது. அதில் சில பெண்கள் ஆபாசமாக உடையை அணிந்து தன்னால் வயதை குறைத்துக் காட்டி ஆண்களை ஈர்க்கிறார்கள். இப்படி கணவரை திருட பார்ப்பவர்களிடமிருந்து உஷாராக கணவரை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.