2023 உலக கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து, நெதர்லாந்துக்கு எதிராக டீம் இந்தியா பயிற்சி போட்டிகளில் விளையாடவுள்ளது.

உலகக் கோப்பை 2023 அக்டோபர் 5 முதல் தொடங்கும். இதற்கு முன் அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி ஆசிய கோப்பையில் விளையாடவுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் ஆட உள்ளது. உலகக் கோப்பையின் முக்கிய போட்டிகளுக்கு முன் இந்திய அணி உட்பட அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடும்.. இந்திய அணி 2 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் ஒரு போட்டி இங்கிலாந்துடனும், மற்றொரு போட்டி நெதர்லாந்துடனும் ஆடவுள்ளது.

உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இதில், முதல் போட்டி மொஹாலியில் செப்டம்பர் 22ம் தேதி நடக்கிறது.2வது போட்டி இந்தூரில் செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெறுகிறது. மேலும் 3வது போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது.

இதன் பிறகு இந்திய அணி 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. இந்தியாவின் முதல் பயிற்சி ஆட்டம் இங்கிலாந்து அணியுடன் கவுகாத்தியில் செப்டம்பர் 30ம் தேதி நடக்கிறது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 3-ம் தேதி நெதர்லாந்து அணியுடன் ஆட்டம் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது. பயிற்சி ஆட்டங்கள் 4 நாட்கள் நடைபெறும். முதல் போட்டி வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே செப்டம்பர் 29ம் தேதி நடக்கிறது. அக்டோபர் 3ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கடைசி போட்டி நடைபெறவுள்ளது.

2023 உலகக் கோப்பைக்கான அணியை இந்திய அணி இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் ஆசிய கோப்பைக்குப் பிறகு அணியை அறிவிக்கலாம். இந்தப் போட்டிக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியும் அறிவிக்கப்படலாம். ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்திய அணி கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் மீது சிறப்பு கவனம் செலுத்தும். காயத்தில் இருந்து மீண்டு ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் ராகுல் களம் திரும்புவார்கள். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் மீண்டும் வந்துள்ளனர். இருவரும் சமீபத்தில் அயர்லாந்துக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டனர்.