திமுக அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின், சமீபத்தில் தமிழகத்தின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். இது அவருடைய அரசியல் பயணத்தில் முக்கியமான தருணமாக கருதப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு முதல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையை சிறப்பாக நிர்வகித்த உதயநிதிக்கு, இந்த பதவி கொடுக்கப்பட வேண்டும் என கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், இன்று அவர் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

இதனை தொடர்ந்து, திரை உலக பிரபலங்கள் பலரும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். நடிகர் சிலம்பரசன் (சிம்பு) தனது வாழ்த்து செய்தியில், “உதயநிதி ஸ்டாலின் அண்ணாவுக்கு வாழ்த்துகள்; இன்னும் பல சாதனைகள் படைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். நடிகர் தனுஷ் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்களும் உதயநிதிக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

“>