திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகரில் இருக்கும் மளிகை கடைகள், பலசரக்கு கடைகளில் ரெடிமேடு பூரி, சப்பாத்தி உள்ளிட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. அந்த உணவு பொருட்கள் பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி முரண்பாடாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நேற்று பழனி வட்டார உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சரவணகுமார் தலைமையில் அதிகாரிகள் மளிகை கடைகள், பல்பொருள் அங்காடியில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பாக்கெட்டுகளில் விற்பனைக்கு வைத்திருந்த உணவு பொருட்களின் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடப்பட்டு இருக்கிறதா என ஆய்வு செய்தனர். இதனையடுத்து உணவு பொருட்கள் தயாரிக்கும் தேதிகளில் முரண்பாடு இருந்தால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும். அப்படி உணவு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என அறிவுரை வழங்கியுள்ளனர்.