
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள மேதாவி பகுதியில் ஒரு ராம மந்திர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான ஒரு மடம் இருக்கும் நிலையில் அதன் மடாதிபதியாக லோகேஷ்வர் மகாராஜா சுவாமி இருக்கிறார்.
இந்நிலையில் ஒரு 17 வயது சிறுமி பேருந்து நிலையத்தில் வீட்டிற்கு செல்வதற்காக காத்திருந்த நிலையில் அந்த சிறுமியை லோகேஷ்வர் மகாராஜா வீட்டிற்கு சென்று விடுவதாக கூறி தன் காரில் அழைத்து சென்றுள்ளார். ஆனால் அவர் வீட்டிற்கு செல்லாமல் ஒரு லாட்ஜுக்கு சென்றார். அங்கு வைத்து அவர் 2 முறை அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் பின்னர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு இது பற்றி வெளியே சொல்ல கூடாது மீறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
ஆனால் சிறுமி வீட்டிற்கு சென்ற பிறகு தன் பெற்றோரிடம் நடந்து விவரங்களை கூறி கதறி அழுதார். சிறுமி கூறியதை கேட்ட அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து சுவாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.