திருப்பூர் மாவட்டத்தில் படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் தொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய வங்கி கடனை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு தொழில் முனைவோர் படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் ஆக்கும் நோக்கத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டம் என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது.

இதன் கீழ் முதல் தலைமுறை தொழில் முனைவோர் தொழில் தொடங்க மானியத்தொடு வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. உற்பத்தி மற்றும் சேவை தொழில்களுக்கு குறைந்தபட்சம் 10 லட்சம் முதல் அதிகபட்சமாக 5 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கும் பொது பிரிவினர் 21 வயது முதல் 31 வயதுக்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவு பெண்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர் உள்ளிட்டவர்கள் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதியாக பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, பட்டய படிப்பு ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் இணைய விருப்பமுள்ளவர்கள் www.msmeonline.tn.gov.in/ needs என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், அவிநாசி சாலை, அனுப்பர்பாளையம் புதூர், திருப்பூர் என்ற முகவரி அல்லது 0421-2475007 மற்றும் 9500713022 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.