
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒரு கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 22 வயதில் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்த சுவாதி என்ற மகள் இருந்துள்ளார். இவர் கடந்த 3-ம் வழக்கம் போல் வேலைக்கு சென்ற நிலையில் பின்னர் வீடு திரும்பவில்லை. அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர். அங்கே ஏற்கனவே சுவாதி பணி முடிந்து வீட்டிற்கு கிளம்பி விட்டது அவர் கூறிவிட்டனர். உடனடியாக உறவினர்கள் மற்றும் அவருடைய தோழியின் வீட்டிற்கு சென்ற பெற்றோர் தேடிய நிலையில் சுவாதி எங்கும் செல்லாதது தெரிய வந்தது.
இந்நிலையில் கடந்த 6-ம் தேதி துங்கபத்ரா நதியில் இளம்பெண்ணின் சடலம் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த அறிக்கையில் அந்த பெண் கழுத்தை நெரிக்கப்பட்டு கொலை செய்திருப்பது தெரிய வந்த நிலையில் பெண் மாயமானதாக எந்த ஒரு புகார் வராததால் அவர் யார் என்பதை கண்டறிய சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக அனாதை பிணம் என்று கருதி பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் அடக்கம் செய்தனர். இதற்கிடையில் கடந்த 7-ம் தேதி தான் சுவாதியின் தந்தை தன் மகள் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்
. அவர் கூறிய அடையாளங்களை வைத்து போலீசார் அடக்கம் செய்தது சுவாதி என்பதை கண்டுபிடித்த நிலையில் பின்னர் விசாரணையை துரிதப்படுத்தினர். தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்தது. அதாவது சுவாதி நயாஸ் என்ற வாலிபரை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் தங்களுடைய காதல் பற்றி நயாஸ் தன்னுடைய நண்பர்களான வினய் மற்றும் துர்காச்சாரி ஆகியோரிடம் கூறியுள்ளார். அவர்கள் நயாஸிடம் நீங்கள் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலை கைவிடும்படி கூறியுள்ளனர்.
இதன் காரணமாக நயாஸ் சுவாதியுடன் பேசுவதை தவிர்த்து விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள தயாரானார். இதை தெரிந்து கொண்ட சுவாதி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வாலிபரை வற்புறுத்தியுள்ளார். இதனால் அவருடைய காதலன் வினய் மற்றும் துர்காச்சாரி ஆகியோருடன் சேர்ந்து இளம்பெண்ணை கொலை செய்ய திட்டம் தீட்டி கடந்த மூன்றாம் தேதி வேலைக்கு சென்று கொண்டிருந்த ஸ்வாதியை காரில் கடத்திச் சென்றனர்.
பின்னர் ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து துண்டால் கழுத்தை நெரித்து அந்த பெண்ணை கொலை செய்து உடலை நதியில் வீசி சென்றது விசாரணையில் தெரிய வந்தது. இதில் நயாசை போலீசார் கைது செய்த நிலையில் மற்ற இருவரையும் தேடி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சுவாதியை மதமாற்றம் செய்ய அவர்கள் வற்புறுத்தியதாகவும் அதனால் தான் கொலை செய்துள்ளதாகவும் இந்து அமைப்புகள் குற்றம் சாட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்