பொதுவாக நாம் அனைவரும் வீட்டில் உள்ள அனைத்தையும் சுத்தமாக வைத்திருப்போம். ஆனால் கண்ணாடி பொருட்களை சுத்தம் செய்வதில்லை. அதனால் அதில் அதிக தூசிகள் நிரம்பி இருக்கும். இதனால் நோய்களை சந்திக்க நேரிடும். எனவே தினமும் உங்கள் வீட்டு ஜன்னல் மற்றும் கண்ணாடி பொருட்களை துடைக்க வேண்டும்.

அப்படி கண்ணாடி பொருட்களை தண்ணீரில் கழுவும் போது தண்ணீரில் கொஞ்சமாக வினிகர் மற்றும் போராக்ஸ் பவுடர் சேர்த்து கழுவ வேண்டும். கண்ணாடிகளை துடைக்கும் போது துணிகளுக்கு பதிலாக காகிதத்தை பயன்படுத்தினால் ஈரப்பதத்தை உறிஞ்சி எளிதில் அகற்றி விடும். விபூதி கொண்டு கண்ணாடியை சுத்தப்படுத்தினால் கண்ணாடி பளபளப்பாக இருக்கும். கண்ணாடி துடைக்க டால்கம் பவுடர்களை பயன்படுத்தலாம்.

கண்ணாடிகளில் கரை அதிகமாக இருந்தால் ஒரு தேக்கரண்டி வினிகரை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து அதனை ஒரு ஸ்பிரே போத்தலில் சேர்த்து கண்ணாடிகளுக்கு தெளித்து துடைக்கலாம். மேலும் எலுமிச்சைச்சாற்றை எடுத்து அதில் கொஞ்சமாக தண்ணீர் கலந்து ஸ்ப்ரே போத்தலில் சேர்த்து கண்ணாடிக்கு தெளித்து துடைத்தால் கண்ணாடியில் முகம் பார்க்கும் அளவிற்கு மின்னும்.