காலை எழுந்ததும் முதலில் நாம் செய்வது காலைக்கடன்களில் ஒன்றான பல் துலக்குவது. இதற்கு டூத் பேஸ்ட் பயன்படுத்துவோம். இந்த டூத் பேஸ்ட் பல் துலக்குவதற்கு மட்டுமல்லாமல் ஒருசிலவற்றை சுத்தம் செய்வதற்கும் பயன்படுகிறது. அந்த வகையில், பற்பசையை சிறிது தண்ணீரில் கலந்து நகைகளில் மீது தடவி மென்மையான துணியால் தேய்த்தால் நகை பளபளப்பாக இருக்கும்.

சிங்க் குழாய்களை சுத்தம் செய்ய பற்பசையுடன் சிறிது வெள்ளை வினிகர் அல்லது எலுமிச்சை சாறு கலந்து குழாயில் தடவி, பிரஷ் கொண்டு நன்கு தேய்த்தால் குழாய் புதிதுபோல் மாறிவிடும். பற்பசையை ஒரு துணியில் தடவி, கண்ணாடியின் மேற்பரப்பை சுத்தமான துணியால் தேய்த்தால் கண்ணாடி புதிதாகிவிடும்.