இஎம்ஐ போன்ற ஒவ்வொரு விஷயங்களுக்காக ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையானது குறிப்பிட்ட தேதியில் தானாகவே வங்கி கணக்கிலிருந்து அளிக்கப்படும். அதேபோல சில நேரங்களில் நமக்கு தெரியாமலேயே குறிப்பிட்ட தொகை வங்கி கண க்கிலிருந்து சிலருக்கு 20 ரூபாய் கழிக்கப்படும். அதற்கான காரணம் என்னவென்றால் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தில் ரூ.20 ப்ரீமியம் செலுத்த வேண்டும். ஆட்டோ டெபிட் செயல்பாட்டின் மூலமாக இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடம் கவரேஜ் காலத்தின் ஜூன் 1 அல்லது அதற்கு முன்பு கணக்கு வைத்திருப்பவரின் வங்கி கணக்கிலிருந்து பிரிமியம் தொகை தானகவே கழிக்கப்பட்டு விடும்.

இந்த பாலிசி ஜூன் 1 முதல் மே 31 வரை ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். மத்திய அரசின் இந்த திட்டத்தில் காப்பீடு செய்தவரின் இறப்புக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். மேலும் இரண்டு கண்களும் முழுமையாக மற்றும் ஈடு  செய்ய முடியாத இழப்பு அல்லது இரண்டு கைகள் கால்கள் செயலிழந்தால் 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.