தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையில் ஒரு சில ரேஷன் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் ரேஷன் அரிசிகளை கடத்துவதாக புகார் எழுந்து வருகிறது.  ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ரேசன் கடை பணியாளர்களை உடனுக்குடன் இடைநீக்கம் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் ரேஷன் அரிசி கடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் பொதுமக்கள் தங்களுடைய பகுதியில் நடக்கும் பொது விநியோகப் பொருட்கள் தொடர்பான புகார்களை உடனுக்குடன் பொது விநியோகப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு புகார் அளிக்கலாம் அதற்காக 18995995950 என்ற தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டது இந்த இலவச தொலைபேசி எண் ஆனது 24 மணி நேரமும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது