
சமூக ஊடகங்களில் ரீல்ஸ் வீடியோ பதிவிடுவத்தின் மீது உள்ள மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. சமீபத்தில், ஒரு பெண் தனது வீட்டின் மொட்டை மாடியில் நடனமாடியதை பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு வாலிபர் ரகசியமாக தனது கேமராவில் பதிவு செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ, சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன், பலர் கருத்து தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். வீடியோவில், பெண் ஒரு பாடலின் பின்னணியில் உற்சாகமாக நடனமாடுகிறார். அந்த நேரத்தில் அருகில் வசிக்கும் வாலிபர், அந்த காட்சியை தன்னுடைய மொபைல் கேமராவில் பதிவு செய்யத் தொடங்குகிறார்.
पड़ोसन..😂🤣😂🤣😂🤣😜 pic.twitter.com/0AVnx6cNPj
— Dr. Gurmeet Bhatia (@GurmeetBha53034) May 31, 2025
மேலும், வீடியோ நடுவே அந்த வாலிபரும் பெண்ணுடன் சேர்ந்து நகைச்சுவையாக நடனமாட ஆரம்பிக்கிறார். இதையெல்லாம் அறியாமல், அந்த பெண் தன்னுடைய ரீலை தொடர்ந்துகொண்டே இருக்கிறார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதும், பலரும் அதில் உள்ள காட்சிகளைப் பார்த்து சிரித்து மகிழ்ந்தனர். “அண்டை வீட்டுக்காரர் சூழ்நிலையை நல்லா பயன்படுத்திக்கிட்டார்!” என்று ஒருவர் பதிவு செய்தார். மேலும், “எங்களுக்கும் அப்படிப் பக்கத்து வீட்டு பிள்ளை இருந்தா, தினமும் லைவ்ல ரீல் காட்சியை பார்ப்போம்!” என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார்.