இன்றைய காலகட்டத்தில் பணப் பரிமாற்றங்கள் வீட்டில் இருந்தபடியே கணக்குகளை கையாளப்படுகின்றது. அதனால் வங்கி சேவையும் மிகவும் சுலபமாகிவிட்ட நிலையில் உள்ளேனில் கேஒய்சி வீடியோவின் வருகையால் வங்கி கணக்கை திறப்பதற்கான செயல்முறைகள் நெறிமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தனி நபர்கள் பல்வேறு வங்கி கணக்கை தேர்ந்தெடுத்து வருகின்றனர். இவ்வாறு பல வங்கிகளில் கணக்கு வைத்திருப்பது ஒரு சில நன்மைகளை தந்தாலும் சில சொந்த சவால்களையும் நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். அதாவது பல்வேறு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்பு தொகை வைத்து பராமரிக்க வேண்டும் அவ்வாறு இல்லை என்றால் அபராத கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்படும். டிஜிட்டல் பரிவர்த்தனைகளால் ஆன்லைன் மோசடி மற்றும் மோசடி சம்பந்தமாக பிரச்சனைகளாக மாறி உள்ளது.

ஏராளமான வங்கி கணக்குகளை இயக்குவது மோசடி நபர்களிடம் சிக்குவதற்கு மிகவும் எளிதாகிவிடும். எனவே கூடுதல் எச்சரிக்கை தேவை. நாம் வைத்திருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்கில் நீண்ட காலம் பரிவர்த்தனை செய்யாமல் இருந்தால் கணக்குகள் செயல் இழக்க செய்ய முடியும். பராமரிக்க வேண்டிய கணக்குகளின் எண்ணிக்கையை தீர்மானிப்பதற்கு முன்பு தனிப்பட்ட நிதி தேவைகள் மற்றும் திறன்களை மதிப்பிட வேண்டும். பரிவர்த்தனைகள் மற்றும் நிலுவை தேதிகளுக்கான தானியங்கு அறிவிப்புகளை அமைத்தல் மற்றும் மோசடியில் இருந்து பாதுகாப்பான வலுவான நடவடிக்கை செயல்படுத்துதல் போன்ற பயனுள்ள பல உக்திகளை நீங்கள் பின்பற்ற வேண்டும்